Latestமலேசியா

பாலமுருகன், அறிவேந்தனிடம் போலீஸ் அராஜகமா?  எழுத்துப்பூர்வ வாக்கு மூலம் தாக்கல்

கோலகங்சார், ஜன 23 – தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தை ஆதரித்தாக‌ சொஸ்மா சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள   பாலமுருகன் மற்றும்  அறிவேந்தன் ஆகிய இருவரிடமும் போலீசார் அராஜகம் புரிந்தார்கள் என்று  பகார் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இவ்விருவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ‌ இங்கு வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு கோலாலம்பூருக்கு மீண்டும் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது அவர்களை கைவிலங்கிடப்பட்ட விதம், மின்னியல் புகைசாதனங்களின் வழி புகைகளை வெளியிட்ட விதம் மற்றும் முறைப்படி கவனிக்கவில்லை போன்ற புகார் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.அறிவேந்தன் (வயது27,) வி.பாலமுருகன்( வயது  37), ஆகிய இருவரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

நேற்றைய விசாரணையின் போது அந்த  இருவருவரும் எழுத்துப் பூர்வ வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். இதில் விசாரணை அதிகாரி ஒருவரை உட்படுத்தி வழக்கை பதிவு செய்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாக்கு மூலம் சட்டத் துறை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர்  அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா  என்பதை முடிவு செய்வார்.

எனினும் டி.பி.பி. இந்த வழக்கை ஏற்கவில்லை என்றாலும் இதனை விசாரிப்பதா இல்லையா என்று நீதிபதி முடிவு செய்ய அதிகாரம் உள்ளது. அதனை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்  என்று இந்த வழக்கில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரின் சார்பில் ஆஐராகியுள்ள வழக்கறிஞர் மேத்தியூஸ் செய்தியாளர்களிடம் தெரித்தார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெறும்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!