Latestஉலகம்

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு ; 14பேர் மாண்டனர்

கியூட்டா, ஜன 11- பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் மாண்டனர். தென் மேற்கு பாகிஸ்தானில் நேற்று மாலையில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது அங்கு குண்டு வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தான் மாநிலத்திலுள்ள பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 21பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!