
ரவாங், நவம்பர் 21 – குண்டாங் கம்போங் பாருவில் பழத்தோட்டம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். பொறாமையின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
நெஞ்சுப்பகுதியில் கத்திக்குத்து காயத்தோடு சாலையோரத்தில் 45 வயதான அந்த ஆடவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அரிபாஃய் தராவி கூறினார். நேற்று இரவு 8.55 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக காய்கறி தோட்டத்தில் வேலை செய்து வரும் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் சில ஆடவர்களையும் போலீசார் தேடி வருவதாகவும் அரிபாஃய் தராவி தெரிவித்தார்.