Latestமலேசியா

பள்ளிவாசலில் 10,000பேர் கலந்துகொண்ட நிகழ்வில் கோவிட் -19 வைரஸ் தொற்றிய நபரும் இருந்தார்

கோலாலம்பூர், மார்ச் 11 –  கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள பள்ளிவாசலில் 10,000 பேர் கலந்து கொண்ட சமய நிகழ்ச்சி  ஒன்று கூடும் நிகழ்வில் கோவிட் -19 வைரஸ் தொற்றிய நபரும் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதிவரை நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கோவிட் -19 வைரஸ் தொற்றிய புருணையைச் சேர்ந்த ஆடவரும் கலந்து கொண்டுள்ளார். மலேசியா உட்பட பல்வேறு நாடுகளைக் சேர்ந்த சுமார் 10,000 பேர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.
மலேசியாவிலிருந்து மட்டும் அந்த நிகழ்வில் சுமார் 5,000பேர் கலந்துகொண்டதாக மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார துறைகள் மேல் விசாரணையை நடத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

கோவிட் -19 வைரஸ் மக்களிடையே பரவுவதை தடுப்பதை உறுதிப்படுத்துவதற்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஓய்வு பெற்ற 53 வயதுடைய அந்த ஆடவர் சமய ஒன்றுகூடும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிப்ரவரி 27ஆம் தேதி கோலாலம்பூர் சென்றுவிட்டு மார்ச் 3ஆம்தேதி சரவாக் மிரி வழியாக ஏர் ஆசியாவின் AK5651 விமானம் மூலம் புருணை திரும்பியுள்ளார். இதனை புருணை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

மார்ச் 6ஆம் தேதி அந்த ஆடவர் ஒரு நாள் பகல் வேளையில் மிரியை சுற்றிப் பார்த்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி அந்த நபருக்கு கோவிட் -19 வைரஸ் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய ஒன்றுகூடும் விழாவில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்கு கோவிட் – 19 வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்புக் கொள்ளும்படி நோர் ஹிஷாம் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் குறிப்பாக பள்ளி விடுமுறையின்போது அவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்கும்படி அவர் வலியறுத்தினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!