Latestமலேசியா

பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை – அரசு சார்பற்ற இயக்கம் வலியுறுத்து

கோலாலம்பூர்,டிச11-

மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் பதின்ம வயதுடைய மூவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை பார்க்கையில் அனைத்து பள்ளிகளிலும் பாலியல் கல்வி தொடங்கப்பட வேண்டும் என   சிறார்களின் பாதுகாப்பை பேணுவோம் எனப்படும் protect and save the children அரச சார்பற்ற இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

விவேகமான மனமாற்றம் தேவை என்ற அடிப்படையில் வளரும் வயதில் இயல்பான ஒன்றாக பாலியல் இருப்பதால் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடு பாலியல்  கல்வி முக்கிய பங்காற்ற முடியும் என அந்த அரச சார்பற்ற இயக்கம் கூறியது.

மக்கள் குறிப்பாக பெரியோர்கள்  பாலியல் கல்வி என்பதை ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமென அந்த இயக்கம் வலியுறுத்தியது.

உடலில் ஏற்படும் மாற்றம், பாலியல் மற்றும் இனவிருத்தி தொடர்பான சுகாதாரம், பாலியல் அடையாளம், வரம்பு மற்றும் அனுமதி, ஆரோக்கியமான நட்புறவு, சமூக விவகாரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இருப்பது தான் பாலியல் கல்வி.

இதனை சிறுவர்கள் புரிந்து கொண்டு ஒருவர் மற்றொருவருடன் ஆக்கப்பூர்வமாக பழகுவதன் மூலம் மதிப்பையும் மற்றவர்களின் ஆதரவையும் பெற முடியும் என  அந்த அரசு சார்பற்ற இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கேட்கும் சக்தியை இழந்த 18 வயது மாற்றுத்திறனாளி  இளம்பெண் ஒருவரை 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சந்தேக பேர்வழிகள் தன்னை  கற்பழித்த விபரம் மற்றும் அவர்களின் அடையாளத்தை அந்தப்பெண் அடையாள மொழியை பயன்படுத்தி தனது தந்தையிடம் தெரிவித்திருக்கிறார்.

சிறார்கள் பாலியல் ரீதியில் மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பாலியல் கல்வி உதவியாக இருக்க முடியும் என்றும் அந்த இயக்கம் கூறியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!