Latestமலேசியா

பரவி வரும் பொங்கல் தொடர்பான சுற்றறிக்கை; அமைச்சரவைக்கு கொண்டுச் செல்வேன் – குலா

கோலாலம்பூர், ஜன 14 – பொங்கல் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளக்கூடாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சுற்றறிக்கை குறித்து நாளைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்பேன் என மனிதவள அமைச்சர் குலசேகரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல்  8 மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஜாக்கிம் எனப்படும்  மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறையின்  ஷாரியா நிபுணர் குழு கூட்டத்தில் முடிவு காணப்பட்டதாக கல்வி அமைச்சின்  பள்ளி நடவடிக்கைப்  பிரிவின் துணை தலைமை இயக்குனரும் ஆசிரியர்  பயிற்சி துணை தலைமை பதிவதிகாரியுமான ஹாஜி அட்ஸ்மான் பின் தாலிப் என்பவர்  கையெழுத்திட்ட  சுற்றறிக்கை   சமுக வலைத்தளங்களில் இன்று வெளியாகி சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பல கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது.

அந்த அறிக்கையில் இந்த உத்தரவை மாநில, மாவட்ட, பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் போன்ற கல்வி அதிகாரிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

“பொங்கல் திருநாளை சமய நிகழ்வாக பார்ப்பது தவறான ஒன்றாகும். பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாக கருதப்படுகிறது. தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையை மேலோங்கச் செய்வது மற்றும் கலை கலாச்சாரத்தை பாதுகாப்பதே பொங்கலின் நோக்கமாகும். அதே சமயத்தில் இந்திய சமுதாயத்தையும் நாளைய தலைமுறையையும் முன்னேற்றப் பாதைக்குச் கொண்டுச் செல்வதே பொங்கலின் பொருளாகும். இந்த விவகாரத்தை நாளைய அமைச்சரவை கூட்டத்தில் நான் விவாதிப்பேன்” என குலசேகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!