Latestமலேசியா

பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு தலைமையேற்கும் முதல் பெண் நோர்மா இஷாக்

கோலாலம்பூர், பிப் 15 –  புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முதன்மை துணை இயக்குனராக நோர்மா இஷாக் நியமிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். அவரது நியமனம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

துணிச்சலும் விவேகமும் நிறைந்தவரான அவர் அனுபவம் வாய்ந்த அதிகாரி என்பதோடு நேர்மையானவர் என்பதால் இந்த பதவிக்கு பொருத்தமானவராக திகழ்கிறார் என ஹமிட் படோர் தெரிவித்தார். இதற்கு முன பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முதன்மை துணை இயக்குனராக இருந்த டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. மார்ச் 6ஆம் தேதி அயோப் கானின் நியமனம் அமலுக்கு வருகிறது. 1991ஆம் ஆண்டு போலீஸ் படையில் இணைந்த நோர்மா 2006ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் அயூப் கானுக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!