Latestஉலகம்

பயங்கரமான காட்டு தீ – அவசர நிலையை அறிவித்தது ஆஸ்திரேலியா

சிட்னி, நவ 11- கட்டுப்படுத்த முடியாத காட்டு தீயினால் ஆஸ்திரேலியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்த தீவிபத்து நிகழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுக்காப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரானா சிட்னியில் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு தீ தீவிரமாக எல்லா இடங்களிலும் பரவியுள்ளது இது முதன் முறையாகும்.
கடுமையான தீயினால் நியூ வேல்ஸ் மாநிலத்தின் முதலமைச்சர் பெரெக்லியன் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இந்த அவசர நிலையானது ஏழு நாட்களுக்கு அமலில் இருக்கும். இதுவரை, மூன்று பேர் மாண்டதோடு ஆயிரக்கணக்கானோர் தங்களின் இருப்பிடத்தை இழந்தனர். மேலும், 150 க்கும் மேற்பட்ட வீடுகளும் முற்றாக அழிந்தது. இந்த கட்டுக்கடங்காத காட்டு தீயினால் அந்த பகுதிகளில் புகைமூட்டமும் ஏற்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button