Latestமலேசியா

நோரா ஹன் விவகாரம்: விசாரணை அறிக்கையை வெளியிடுவீர் பிரான்ஸ் எம்.பிக்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன. 15 –  அயர்லாந்து இளம் பெண் நோரா ஹன் கியுரின் மரணம் தொடர்பாக மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் அல்லது இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவை அவரது குடும்பத்தினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பிரான்ஸ் கோரிக்கை விடுத்தது.

15 வயது நோரா ஹன் மரணம் தொடர்பில் மேல் விசாரணை எதுவும் கிடையாது என சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் குறிப்பிட்டுள்ளதால் அந்த முடிவை மறுபரிசீலிக்கும்படி பிரான்சைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அனி ஜெனடட் மற்றும் அலெக்சென்டரா ஆகியோர் வெளிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டனர். கடந்த ஆண்டு தமது குடும்பத்தோடு விடுமுறைக்கு வந்து போர்ட்டிக்சன் அருகே தங்கும் விடுதியில் தங்கிய மறுநாளில் நோரா ஹன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின் காட்டுப்பகுதியிலுள்ள நீரோடையில் இறந்து கிடந்தார்.

நோரா ஹன் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்துவதன் மூலம் உண்மையான காரணத்தை அவரது பெற்றோர் அறிந்து கொள்வதற்காக வாய்ப்பை பெறமுடியும் என அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர். மனவளர்ச்சி குன்றிய அந்த இளம்பெண்ணின் மரணம் தொடர்பான போலீஸ் விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நோரா ஹனின பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியபோதிலும் மலேசிய அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதோடு சில தகவல்களை கொடுப்பதிலும் மறுத்து வருவதாக அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறினர்.

விபத்தில் ஏற்பட்ட மரணம் என்ற நிலையில் மட்டுமே மலேசிய அதிகாரிகளின் விசாரணையின் வியூகம் இருக்கிறதே தவிர பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதர அம்சங்களை நோக்கி அவர்களது விசாரணை விரிவுபடுத்தப்படாமல் இருப்பது குறித்தும் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர். திடீர் மரணம் என நோரா ஹனின மரணம் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் டத்தோ ஹூசிர் முகமட் இதற்கு முன் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!