Latestமலேசியா

நோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்

கோலாலம்பூர் டிச 7 – தங்களது நோயாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பதை தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த  மருத்துவர்களும், பல் மருத்துவர்களும் விரைவில் முடிவு செய்ய முடியும்.
 தாராளமயமான சந்தை மற்றும் கட்டடண  அமைப்பு கட்டுப்பாட்டில் தளர்வை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவையின் இந்த முடிவு அமைந்துள்ளது. இந்த முடிவினால் தங்களது மருத்துவர்களை தேர்வு செய்யும் பயனீட்டாளர்களின் அதிகாரம் வலுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ  சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
தேசிய வாழ்க்கைச் செலவின மன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் இதர நடைமுறை நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் அமைச்சரவையின்  இந்த முடிவை சுல்கிப்ளி அறிவித்தார்.
ஆலோசனை கட்டணம் மீதான கட்டுப்பாட்டை ரத்து செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மருத்துவர்கள் தங்களது திறன், நிபுணத்துவம் மற்றும் சேவையின் தரத்தை  மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டமாகவும் இது அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!