Latestமலேசியா

நூறு வயது வரை நான் பிரதமராக இருக்க வேண்டுமா ? மகாதீர் நகைச்சுவை

கோலாலம்பூர், டிச 3 – ஒரு பிரதமரின் பதவிக்காலம் இரண்டு தவணை காலத்திற்கு மட்டுமே இருக்கவேண்டும் என்று வரையறுக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு டாக்டர் மகாதீர் முகமட் ‌இன்று தமது ஆதரவைத் தெரிவித்தார்.
எனக்கு 94 வயதாகிவிட்டது. நூறு வயது வரை நான் பிரதமராக இருக்க
வேண்டுமென நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா என்று அவர் நகைச்சுவையோடு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2019ம் ஆண்டின் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் லியூ  வுய் கியோங்  தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர், மந்திரிபுசார்கள் மற்றும் மாநில முதல்வர்கள் இரண்டு தவணைகள் மட்டுமே அந்த பதவியில் இருக்க முடியும். இதனிடையே  போட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் இப்ராஹிம் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனை தனிப்பட்ட ஒருவரது கருத்தாகும் என மகாதீர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை மூத்த பத்திரிகையாளர் காடிர்‌ ஜாசின் தெரிவித்திருக்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. யார்வேண்டுமானாலும் கருத்தை வெளியிடலாம் அனைவரது கருத்துக்களையும் நான் கேட்பேன். எனினும் அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றார் மகாதீர்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!