Latestஉலகம்

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – இரு வழக்கறிஞர்கள் மரணம்

பேங்காக், நவ. 13 –   தாய்லாந்து நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு வழக்கறிஞர்களும் துப்பாக்கிக்காரனும் மரணமடைந்தனர்.

சந்தாபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் எதிர்தரப்பு நபர்,  அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், அங்கிருந்த போலீஸ்காரர் அந்த நபரை சுட்டு கொன்றார்.

அந்தச் சம்பவத்தின் வீடியோ பதிவு வைரலாகப் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சொநந்த் தகராறு, காதல் விவகாரங்கள் மற்றும் வர்த்தகத் தகராறுகள் முதலியவற்றில் அங்கு பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

ஆயினும், நீதிமன்றத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடானது,  பாதுகாப்பில் கவனமின்மையைக் காட்டுகிறது.

ஒரு வாரத்துக்கு முன்னர், பட்டாயா நீதிமன்றத்தில் 3 போதைப்பொருள் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பித்து ஓடியுள்ளனர். எனினும், பின்னர் அவர்கள் பிடிபட்டனர்.

கடந்த மாதம்,  நீதிபதி ஒருவர் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதைத் தவிர்க்க முடியாமல்,  தம்மையே சுட்டுக் கொண்டு தற்கொலை புரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!