Latestஉலகம்

நியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி

நியூசிலாந்து, டிச. 7 – நேற்று மாலை 3 .15 மணியளவில் நியூசிலாந்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கியவர்களில் மலேசியர்கள் ஐவர் அடங்குவர் என வெளியூறவு அமைச்சு உறுதிசெய்துள்ளது. வட கைகோரா (Kaikoura) நெடுஞ்சாலையில் ஒரு காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 மலேசியர்கள் பலியாகியதாகவும் மற்ற இரண்டு பேர் பலத்த காயத்திற்கு உள்ளாகினர் என்றும் “ தி நியூசிலாந்து ஹெரல்ட்” செய்தி தகவல் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ஐவரும் சபாவைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது. இறந்தவர்களின் அடையாளம் தெரியப்படாத நிலையில் உயிர்தப்பிய இருவரும் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவ்விருவரும் ஹெலிகாப்டர் மூலம் கிறிஸ்ட்சர்ச் மற்றும் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நியூசிலாந்து போலீஸ்  இந்த விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!