Latestமலேசியா

நினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)

தனது தந்தை அன்போடு கொடுத்த 10 வெள்ளி நோட்டை   கடந்த 9 ஆண்டு காலமாக பத்திரப்படுத்தி வைத்த நிலையில்  திடீரென்று காணாமல் போனதால் வேதனையோடு இருந்த   அனி மலருக்கு 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த பண நோட்டு கையில் கிடைப்பதற்கு உதவியாக இருந்த வங்கி அதிகாரிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மலாக்காவைச் சேர்ந்த 26 வயதுடைய  அன மலர்  ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது வழக்கமாக ரிம 1 கொடுக்கும் அவரது தந்தை திடீரென ஒருநாள் 10 வெள்ளியை கொடுத்து இரண்டு வாரத்திற்கு பயன்படுத்திக் கொள் என கூறியுள்ளார்.  அதே தினத்தில்  பள்ளியில் இருந்த போது தந்தை விபத்தில் காலமானார் என்ற செய்தியினால்  இடிந்து போன அனி மலர் அவரது தந்தையின் நினைவாக அவர் கொடுத்துச் சென்ற பண நோட்டில் ‘வெள்ளிக்கிழமை காலை 7.10 மணியளவில் தந்தை கொடுத்த இறுதி நோட்டு” என மனம் உருகி அந்தக் குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

ஆனால், திடீரென்று தமது பணப்பை காணாமல் போக அந்த 10 வெள்ளி நோட்டும்  காணாமல்  போனதால் அனி மலர் பெரும் வேதனையில் இருந்து வந்தார். எனினும் அந்தப் பண நோட்டு 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துக் கொள்கிறார் கணினி பொறியியலாளரான அன் மலர்.


இதனிடையே, Norhaizalifa Othman எனும் 38 வயது  பெண் வங்கி ஊழியரிடம்  அந்த  நோட்டு கிடைக்கப்பெற அதிலிருந்த குறிப்பைப் பார்த்து மனம் வருடி அதனை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணியுள்ளார். அந்த நோட்டை படம் பிடித்து சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அன மலர் அவரை தொடர்பு கொண்டு பேசியதோடு அந்த நோட்டை நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.  இந்நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பாக Norhaizalifa – வை  வணக்கம் மலேசியா தொடர்பு கொண்ட பேசிய போது அவர் இவ்வாறு  பகிர்ந்துக் கொண்டார்.
பிறர் யாரென்று தெரியாது அவர் ஏக்கம், உருக்கம், துக்கம் ஆகியவற்றை தானும் உணர்வதே உண்மையான மனிதத்தின் மாண்பு. அதை பறைசாற்றிருக்கிறார்  Norhaizalifa Othman. இவரைப் போன்று

இவரைப் போன்று நல் உள்ளங்களின் எண்ணிக்கை அதிகமானால் பல்லினம் கொண்ட நம் நாட்டில் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது எளிது. அதே சமயத்தில் சமூக ஊடகங்கள் என்பது வெறும் அநாவசிய செய்திகள் பரப்பும் தளம் எனக் கூறப்படும் கருத்தையும் தாண்டி அது நல்ல விஷயங்களுக்கும் பயன்படும் பெரிய சக்தி என்பதனை இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!