Latestஇந்தியா

நாய்க்கு புலி வேஷம்; குரங்குகளை விரட்ட விவசாயியின் தந்திரமா?

கர்நாடகம்; நவ 30 – தனது பயிர்களை குரங்குகளிடமிருந்து காப்பாற்ற தனது நாய்க்கு புலி வேஷம் போட்டுள்ளார் விவசாயி ஒருவர். அதற்காக தனது நாய்க்கு மாதந்தோறும் “ஹேர் டை” எனப்படும் முடிக்கு பயன்படுத்தப்படும் வர்ண பூச்சுகளை நாயின் மேல் தடவி அந்நாய் புலியைப் போல தோற்றமளிக்கச் செய்துள்ளார்.
இச்சம்பவம் கர்னாடக மாநிலம், நல்லூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. தனது பயிர்களை குரங்குகள் அடிக்கடி நாசம் செய்வதை எண்ணி ஆத்திரமடைந்த ஶ்ரீகாந்தா காவ்டா எனும் விவசாயி ஒருவர் இறுதியாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.


சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அருகாமையில் இருக்கும் மற்றொரு விவசாயி, தனது வயலி புலி உருவ பொம்மையை வைத்து குரங்குகளை விரட்டியுள்ளார். அந்த யுக்தியை கையாண்ட ஶ்ரீகாந்தா முதலில் புலி பொம்மைகளை வயலில் வைத்துள்ளார். அதில் பயனும் கண்ட அவர் மகிழ்ச்சி அடைந்தார். எனினும், பொம்மைகளை வைத்தே காலம் தள்ள முடியாது என்று உணர்ந்து, இறுதியில் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்ற முடிவெடுத்துள்ளார். இத பலன் இன்னும் நன்றாக இருப்பதாக ஶ்ரீகாந்தா உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். குரங்குகள் தனது பயிர்களை நாசம் செய்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக முடிக்கு பயன்படுத்தும் வண்ண பூச்சுகளௌ மாதந்தோறும் தனது நாய்க்கு பூசி விடுவேன். அது புலி போலவே தென்படுவதால், சில சமயங்களில் ஊருக்கு வரும் புதியவர்கள் கூட பயந்துவிடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


இந்நிலையில், அவரது இந்த செயலுக்கு சில விலங்கு பிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வண்ண பூச்சு நாயின் தோளுக்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்து. அவ்வாறு செய்வதை முதலில் நிறுத்துங்கள். உங்களின் சுயலாபத்திற்காக அந்த நாயை இவ்வாறு செய்வது தவறு என பலரும் தங்களீன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!