Latestமலேசியா

நாடெங்கிலும் களைக்கட்டியுள்ள பொங்கல் குதூகலம்

கோலாலம்பூர், ஜன 14 – மலேசியாவில் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களில் பொங்கல் குதுகலம் களைகட்டத் தொடங்கியது. நாளைய  பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர், கிள்ளான், ஷா அலாம், சிரம்பான், ஈப்போ, புந்தோங், ஜொகூர்பாரு , பினாங்கு  உட்பட பல  முக்கிய நகர்களில் பொங்கல் பானைகள், கரும்புகள், பழங்கள் உட்பட மற்றும்  பொங்கல் இனிப்பு பண்டங்களை  வாங்குவதற்கு மக்கள் கூட்டம் காலை முதலே திரண்டுள்ளது.

இன்று வேலை தினமாக கொண்டுள்ளவர்கள் தங்களின் வேலை முடிந்து பொங்களுக்கான பொருட்களை வாங்க கடை வீதிகளுக்குச் செல்வார்கள் என்பதால், இரவு நேரம் வரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். இன்று காலையிலிருந்து  முக்கிய நகர்கள் மற்றும் வீடமைப்பு பகுதிகளில் உள்ள கடைகளிலும் பொங்கல் பானைகள்  சுறுசுறுப்பாக விற்பனையாகின. தீபாவளிக்கு அடுத்து இந்தியர்கள்  பெரிய அளவில் கொண்டாடப்படும்   திருநாளாக பொங்கல் அமைகிறது.  பொங்கலை முன்னிட்டு  வீடுகளில் , கோலமிட்டு , தோரணங்கள், மா இலைகளுடன் அலங்கரிக்கும் பணிகளில் குடும்ப தலைவிகள் மும்முரம் காட்டியுள்ளனர்.

அதுவும் பொங்கல் முதல்நாளான  இன்று  போகி என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை  அகற்றி வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் பலர் ஈடுபட்டனர். நாளை  தை மாதத்தின்  முதல் நாள் என்பதோடு   காலை  மணி 7.30 முதல்  காலை மணி 8.55க்குள் மற்றும்  காலை  10.30 மணி முதல்  காலை 11.55 மணிக்குள் பொங்கல் வைக்கும் நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொங்கல் வைக்க முடியும என்றும் கூறப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!