Latest

நாசி லெமாக் என்றால் சும்மாவா, இதுதான் நாசி லெமாக்கின் பவர்

கோலாலம்பூர், ஜன 17 – உணவின் சொர்க்க பூமியாக கருதப்படும் மலேசியாவில், எங்கு எந்த மூலைக்கும் எத்தனை மணிக்குச் சென்றாலும் சுவையான உணவு நமக்கு கிடைத்துவிடும். ஒரு வகையில் மலேசியர்களை ஒன்றிணைக்கும் ஒரு அம்சமும் உணவு என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியர்களிடம் உங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால், ஒரே விடைதான், அது நாசி லெமாக்.
அப்படிப்பட்ட நாசி லெமாக்கை ஒருவர் பிடிக்கவில்லை என்றால் சும்மாவிட்டுவிடுவார்களா மலேசியர்கள்?
புதன்கிழமையன்று, லண்டனைச் சேர்ந்த நிருபர் ஒருவர் தான் உண்ட நாசி லெமாக்கை மோசமான உணவு என்றும் பத்துக்கு சுழியம் என்ற புள்ளியையும் வழங்கி டூவிட்டரில்   விமர்சனம் செய்தது பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரின் இந்த பதிவிற்கு மலேசியர்கள் மட்டுமல்லாது நாசி லெமாவை சுவைத்து உண்ட வெளிநாட்டினர் சிலரும் கொடுத்த விளக்கத்தை கண்டு இறுதியில் அந்த நிருபர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

பிரிட்டன் Telegraph பத்திரிக்கையின் நிருபரான  Katie Morley என்பவர் 13 மணிநேரம் பிரிட்டிஸ் ஆர்வேய்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது விமானத்தில் ‘நாசி லெமாக்’ வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்டு பார்க்காமல்  வெளித்தோற்றத்தை வைத்து அதனை மோசமான உணவு வர்ணித்து விமர்சனம் செய்துள்ளார் Katie.

தனது பதிவில், “பொது நலன் கருதி, பிரிட்டிஷ் ஏர்வேஸ்சில் 13 மணிநேர விமானத்தின் போது எனக்கு அளித்த இந்த மோசமான உணவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இதோ: கோழிக்கறியுடன் வேகவைத்த முட்டை, ஈரப்பசையான நெத்திலி. வழக்கமாக நான் விமான உணவை விரும்பி உண்பேன். ஆனால் இந்த வகை உணவிற்கு நான் 0/10 என்ற புள்ளிதான் வழங்குவேன்” என்று அவர்  கூறியிருந்தார்.

இவரின் பதிவு, நெட்டிசன்களின் பலரின் கவனத்தை ஈர்த்தது. இவரின் டூவீட் பதிவின் கீழ், இது சுவையான உணவு, நீங்கள் சாப்பிட்ட நாசி லெமாக் சுவையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது மலேசியர்களின் விருப்ப உணவு என பலதரப்பட்ட கருத்துகளை கண்ணியமான முறையில் பதிவிட்டு வந்தனர். இன்னும் சிலர் இவரை திட்டவும் செய்தனர். 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!