Latestமலேசியாவிளையாட்டு

நதிகளை தூய்மைப்படுத்துவதற்காக வெ.5 லட்சத்தை JDT ஒப்படைத்தது


பெட்டாலிங் ஜெயா, நவ 14-  நதிகளைத் தூய்மைபடுத்தும் திட்டத்திற்காக JDT காற்பந்து கிளப்புக்கு கிடைத்த 500,000 மாநியத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என  ஜொகூர் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு இஸ்மாயில் கூறியுள்ளார்.
அண்மையில் மலேசிய கிண்ணக் காற்பந்து போட்டியில் ஜொகூர் JDT அணி வெற்றிப் பெற்றது. அதற்காக மாநில அரசின் சார்பாக வெ.5 லட்சம் ரொக்கம் பரிசு  வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாநில அரசு வழங்கிய ரொக்கத்தை மாநில அரசிடமே ஜொகூர் அணி வழங்கியுள்ளது. இதற்கு முன், 2017ஆம் ஆண்டு  ஜொகூர் அணி வென்றபோதும் மாநில அரசாங்கம் வழங்கிய வெ. 5 லட்சம் ரொக்கத்தை பினாங்கு மாநில வெள்ளித்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!