Latestஇந்தியாசினிமா

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை, பிப் 6 – சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.’பிகில்’ படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து புகார் எழுந்தது. இதன் காரணமாக நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜயிடம் விசாரித்துள்ளனர்.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘பிகில்’ படத்தில் நடித்த போது வாங்கிய சம்பளம் குறித்து விஜயிடமும் விசாரணை நடத்தப்பட்டது. படப்பிடிப்பின் போது விஜயை கையோடு காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள சினிமா பைனான்சியர் வீடுகளிலும் இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.50 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!