
சென்னை, நவ30 – தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சந்தானம் தன் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகை மதுமிதாவுடன் இணைந்து நடித்து வருவதாக புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பரவி வருகிறது.
தமிழ்ச்சினிமாவின் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்கிறார்.
அவர் நடித்த A1 திரைப்படம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றதைத் தொடர்ந்து ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்பொழுது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களிடையே சந்தான-மதுமிதா காம்பினேஷனில் மேலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.