Latestஇந்தியாசினிமா

நகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

சென்னை, பிப் 5 – தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும், மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் வெளியானது.

அது ஒரு வதந்தி என்று நடிகர் யோகி பாபு தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் நிகழும் போது அனைவரிடமும் தெரிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிற்கு இன்று திடீர் கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து அனைவரிடமும் அதிர்ச்சியையும் அதே சமயத்தில் நிறைய வாழ்த்துகளும் காணப்பட்டனர்.

இன்று காலை திருமணம் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் அகபக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சியை குறித்தும்  அவர் தெரிவித்துள்ளார்.

 

.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!