Latestமலேசியா

தோ புவான் உமா சம்பந்தன் காலமானார்

கோலாலம்பூர், ஜன 31- ம.இ.காவின் முன்னாள் தலைவரும், முன்னாள்  தொழிலாளர் அமைச்சரும், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்தவருமான  துன்  சம்பந்தன் அவர்களின் துணைவியார்  தோ புவான் உமா சம்பந்தன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில்  காலமானார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் அதன் முன்னாள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள  91 வயதுடைய தோ புவான்   உமா சம்பந்தன் பல்வேறு சமூக பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.   துன் சம்பந்தன் அவர்களின்  அரசியல் மற்றும் சமூக பணிகளுக்கு பெரும் துணையாக அவர் இருந்து வந்துள்ளார் . இது பற்றிய விரிவான தகவல்கள் பின்னர் வெளிவரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!