Latestமலேசியா

தொலைபேசி ஒலிப்பதிவு விவகாரம்: லத்திபா கோயாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 16 – 1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேசனல் நிதி முறைகேடு விவகாரத்தை மூடி மறைப்பது  தொடர்பில்  முன்னாள் பிரதமர் நஜீப், அவரது துணைவியர் ரோஸ்மா மன்சோர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டதற்காக எம்.ஏ.சி.சி தலைவர் லத்திபா கோயாவிடம் இன்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இன்று பிற்பகல் 2.35 மணியளவில் சி.ஐ.டி  சிறப்பு விசாரணை பிரிவின்  10 அதிகாரிகள்   புத்ரா ஜெயாவிலுள்ள  எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு  வருகை புரிந்ததாக   கூறப்பட்டது. அந்த ஒலிப்பதிபு நாடாவை வெளியிட்ட பின் லத்திபா கோயாவை சிறுமைப்படுத்துவதற்கான சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கடந்த திங்கட்கிழமையன்று  எம்.ஏ.சி.சி  அதிகாரி ஒருவர்  போலீசில் புகார் செய்திருந்தார். அந்த சதியில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் போலிசாரிடம் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இவர்களில் சில வழக்கறிஞர்களின் பெயர்களையும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.  எனினும் அவர்களது அடையாளங்கள் குறித்து  ஊடகங்களிடம்  தெரிவிக்கப்படவில்லை.1எம்.டி.பி மற்றும்  எஸ்.ஆர்.சி இன்டர்நேசனல்  சென்.பெர்ஹாட் விசாரணை தொடர்பான தகவலை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் விசாரணை பிரிவைச்   சேர்ந்தவர்கள்  நஜீப் ரசாக்கிடம்  கசியவிட்டதாக கூறப்படும்  தொலைபேசி உரையாடல் பதிவை இம்மாதம் 8ம் தேதி எம்.ஏ.சி .பத்திரிகையாளர்களிடம்  லத்திபா கோயா அம்பலப்படுத்தினார். இது தொடர்பாக எம் ஏ.சி. சி போலீசில் புகார் செய்த்தோடு  அந்த தொலைபேசி ஒலிப்பதிவு நாடாக்களையும் போலீசிடம் ஒப்படைத்திருந்த்து.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!