Latestமலேசியா

தொடர்கிறது மலேசிய- இந்திய பொருளாதார நெருக்குதல்; தொழிலாளர்கள் உட்பட புதிய இறக்குமதி தடைக்கு திட்டம்

கோலாலம்பூர், ஜன 15 – பிரதமர் துன் மகாதீர், காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பிலும் இந்தியா மீது எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருவதால் மலேசியாவுக்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதார நெருக்குதல்களை தொடுக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே செம்பனை இறக்குமதியைக் குறைக்க அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் இப்போது microprocessors எனும் மின்னியல் வில்லைகள் இறக்குமதியை கட்டுபடுத்தவுள்ளதாக அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

அண்மையை காலமாக மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமூகமற்ற சூழல் நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாய்க்கை அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப மறுத்து வருவது, காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது எனும் கூற்று, இந்திய குடியுரிமை சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது எனும் விமர்சனம் போன்றவற்றால் நரேந்திர மோடி அரசாங்கம் மகாதீர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இதனிடையே இந்தியா, மலேசிய செம்பனை இறக்குமதிக்கு தடை விதித்ததால் மலேசியாவும் இங்கு வந்து வேலை செய்யும் இந்திய நாட்டவர்கள் மற்றும் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக தடை விதிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என துன் மகாதீரின் ஊடக ஆலோசகர் காடிர் ஜாசின் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் 1 லட்சத்து 50 ஆயிரம் இந்திய நாட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர் என இந்திய தூதரக புள்ளி விவரம் கூறுகிறது. நாம் அதை கட்டுபடுத்தும் நிலைபாட்டை எடுக்கலாம். இந்திய உணவு பொருட்களுக்கு பதில் நாம் உள்நாட்டிலேயே பயிர் செய்வது அல்லது வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் யோசிக்கலாம் என காடிர் ஜாசின் தெரிவித்திருதார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!