Latestஉலகம்

தேவாலயத்தில் துப்பாக்கிகாரர்கள் தாக்குதல் – 14 பேர் மாண்டனர்

கிகாலி, டிச 2 – புர்கினோ  பாசோவில் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின்போது துப்பாக்கிகார்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் மாண்டனர். நைஜீரியா  எல்லைக்கு அருகேயுள்ள ஹோன்தோவ்காரா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனை சேவையின் போது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.

பிரார்த்தனையின் போது துப்பாக்கிகாரர்கள் தேவாலயத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதால் 14 பேர் மாண்டனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். தாக்குதல்காரர்களுக்கு எதிராக ராணுவ வீரர்கள் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கூறின. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

புர்கினா பாசோ மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாவர். கனடா சுரங்க நிறுவனத்தின் உள்ளூர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பயங்கரவாத கும்பல்  கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்தை புர்கினோ பாசோ  அதிபர்  ரோமக் மார்க் கபோரே கடுமையாக சாடினார். பாதிக்கப்பட்டவர்கள் அமைதி மற்றும் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மூன்று முக்கிய தீவிரவாத கும்பல் செயல்பட்டு வருகின்றன. இவ்வாண்டு மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இல்லங்களில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!