Latestஉலகம்

தேச துரோக குற்றச்சாட்டு; முஷாராப்பிற்கு மரண தண்டனை – பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமபாத், டிச 17 – தேச துரோக குற்றத்திற்காக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷராப்பிற்கு இஸ்லாமபாத்திலுள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.

1999ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய அவர் தம்மை பாகிஸ்தான் அதிபராக பிரகடனப்படுத்திக்கொண்டார்.  பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதியான முஷராப் 2007ஆம் ஆண்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் தேசத் துரோக குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷாரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2003ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் சர்வாதிகாரி முஷராப்பிற்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. ஆறு ஆண்டுகால விசாரணைக்குப் பின் முஷராப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானின் அரசியலமைப்பை சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

அதே வேளையில் இந்த தீர்ப்புக்கு எதிராக முஷராப் மேல் முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  மேல் முறையீடு செய்வதாக இருந்தால் அவர் பாகிஸ்தானுக்கு நாடு திரும்பி நீதிமன்றத்திற்கு நேரடியாக வரவேண்டும்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!