Latestஇந்தியாசினிமா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் செல்லாது – மறுதேர்தலுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன 24 – தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு நடத்திய தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதால் அந்த தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

நடிகர் சங்க தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதால் முடிவுகளை அறிவிக்க வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என நடிகர் நாசார், விஷால், கார்த்தி ஆகியோர் பதில் வழக்கு மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்குப் பின்னர் இந்த தேர்தல் செல்லாது என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .அதோடு 3 மாத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அதுவரை சங்கத்தின் நிர்வாக பொறுப்புக்களை அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி நிர்வகிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!