
ஜோர்ஜ் டவுன், நவ. 5 – திங்கட்கிழமை ஜோர்ஜ் டவுன், புக்கிட் காம்பிரில் உள்ள மூன்று மாடி வீட்டில் திருடச் சென்ற கள்வர்கள் அங்கு திருட முடியாமல் போனதால், வெடி குண்டுகளை வீட்டினுள் வீசி விட்டுத் தப்பித்துச் சென்றனர்.
தகவல் அறிந்து அங்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சென்று அந்த வெடி குண்டுகளை அகற்றினர். செவ்வாய்க்கிழமை காலை 12.15 மணிக்கும் 12.20க்குல் இரு வெடிச் சந்தங்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.