Latestமலேசியா

திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி பெண் ஒருவர் படுகாயம்

திருச்சி, ஜன 16 –  திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் ஜோதிலட்சுமி எனும் பெண் படுகாயமடைந்துள்ளார்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளும், எருது விடும் போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில்  திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தேறியது.  இந்த போட்டியில் 400க்கும் மேற்றபட்ட காளைகளும் ஏராளமான  வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். அப்போது உறையூர் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சமி என்ற பெண்ணை திடீரென பாய்ந்து சென்று காளை முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை  திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!