Latestமலேசியா

திருச்சியில் தவித்துக் கொண்டிருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப தனி விமானத்திற்கு நிதியுதவி வழங்குவீர் – கே.பி சாமி

கோலாலம்பூர், மார்ச் 25 – நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களில் 1000க்கும் மேற்பட்டோர் இதுவரை திரும்பியுள்ள நிலையில் இன்னும் பலர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்கலீல் தமிழகம் மற்றும் காசிக்கு ஆன்மிக பயணம் செய்த 70 பேர் உட்பட வேறு காரணங்களுக்காக சென்றவர்களும் கடந்த சில நாட்களாக திருச்சியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களில் சில வயதானவர்கள் மற்றும் நோயாளிகளும் உள்ளனர், இவர்களை மலேசியாவிற்கு திரும்ப கொண்டு வருவதாற்கான முயற்சியை கிள்ளான் கே.பி.எஸ் பயண நிறுவன நிர்வாகி கே.பி சாமியும் சில பயண நிறுவன முகவர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இவர்களது இந்த முயற்சிக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டத்தோ சகாதேவன், ஓம்ஸ் அறவாரியம், முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன் ஆகியோர் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க முன்வந்துள்ளதாக கே.பி.சாமி தெரிவித்தார். மலேசியாவிலிருந்து செல்லும் தனி விமானத்தில் மூலமே இவர்களை கொண்டு வரமுடியும் என்பதால் நல்ல உள்ளங்களைச் சேர்ந்த மலேசிய இந்தியர்கள் நிதியுதவி வழங்கி ஆதரவு நல்கும்படி அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய அரசாங்கம் மலேசியா உட்பட சில வெளிநாடுகளின் விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்துள்ளது. அதோடு இந்திய விமானங்களும் மலேசியாவுக்கான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னை மற்றும் திருச்சியில் சிக்கித் தவித் சுமார் 1,116 மலேசியர்கள் நாடு திரும்புவதற்கு ம.இ.கா தனது சொந்த செலவில் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு 6 ஏர் ஆசியா விமானங்களை ஏற்பாடு செய்ததால் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பினர்.

அதே வேளையில் இந்தியாவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்களும் வேறு காரணங்களுக்காகவும் சென்ற மலேசியர்களில் பலர் விமானச் சேவை இல்லாததால் அவர்கள் கோலாலம்பூர் திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் திரும்பி வருவதற்கு ஏர் ஆசியா, மலிண்டோ ஏர் ஆகியவற்றில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர், இந்தியாவில் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் அந்த விமானங்கள் சேவையை மேற்கொள்ளாததால் இப்போது மலேசிய இந்தியர்கள் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர்.

மலேசியாவிலிருந்து சொந்தமாக விமானம் சென்றால்தான் திருச்சியில் சிக்கிக் கொண்டவர்களை இங்கு விரைவாக கொண்டு வரமுடியும் என்ற நிலை உள்ளது . நாங்கள் ஏற்பாடு செய்யும் விமானம் இந்தியாவில் தரையிறங்குவதற்கும் வெளியுறவு அமைச்சு இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உதவ வேண்டும் என கே.பி சாமி கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!