Latestமலேசியா

தாமான் டேசாவில் நிர்மாணிக்கப்பட்டுவந்த ஆடம்பர அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது

கோலாலம்பூர், பிப் 14 –  ஜாலான் கிள்ளான் லாமாவுக்கு அருகே தாமான் டேசா செபூத்தே, தாமான் டேசா கொலிஷனில் கட்டப்பட்டுவரும் ஆடம்பர அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடிகளில் குறைந்தது 4 பேர் சிக்கிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறின. அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்க கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

இன்று மாலை மணி 3.37அளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 10 பணியாளர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீ மற்றும் மீட்புத்துறையின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் உண்மையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.. கட்டடத்தின் ஒரு பகுதி மட்டுமின்றி அதன் முகப்பு மற்றும் சாரக்கட்டும் சரிந்து விழுந்ததாக கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!