Latestமலேசியா

தாப்பாவில் விபத்து- 3 வயது குழந்தை உட்பட இருவர் மரணம்

தாப்பா, நவ.13 –  தாப்பா கிலோமீட்டர் 317, தெற்கு வடக்கு  நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில்,  இருவர் பலியாகினர்.

நேற்று இரவு 10 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. 2 கொள்கலன் லோரி, 1 லோரி மற்றும் 4 கார்கள் ஆகியவை விபத்துக்குள்ளானதாக தாப்பா போலீஸ் அதிகாரி வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இவ்விபத்தில் சிக்கிய 13 பேர்களில் புரோடுவா மைவி காரில் பயணித்த  28 வயது சால்வதி யாக்கோப், மற்றும் Mitsubishi Pajero காரில் இருந்த 3 வயது Beh Xiu Zhung, என்ற குழந்தையும்  உயிரிழந்த வேளை மூவர் காயமடைந்தனர். மேலும் எண்மர் எந்த காயமுன்யின்றி உயிர் தப்பினர்.

காகிதங்களை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூரை நோக்கி சென்று  கொண்டிருந்த கொள்கலன் லோரி, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன் சென்று கொண்டிருந்த புரோடுவா காரை மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து இடது பக்கம் சென்று கொண்டிருந்த Honda Accord காரையும், வலது பக்கத்தில் சீனி பொட்டலங்களை ஏற்றிக் கொண்டு சென்ற கொள்கலன் லோரியை மோதி தள்ளியது. அதன் பின்னரே ஒவ்வொரு வாகனமும் ஒன்றின் பின் ஒன்றாக மோதியதாக  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக தபபா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், காயமடைந்தவர்களையும்  அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட 52 வயதுடைய காகித கொள்கலன் லோரி ஓட்டுனரின் இரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகள் வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Vetha • 4 mins

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!