Latestமலேசியா

தலைவர்கள் மன்றம் பிரதமர் பரிமாற்றம் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் – DAP தலைவர்கள்

கோலாலம்பூர், ஜன 15 – டி.ஏ.பி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் அதிகாரப் பரிமாற்றம் விரைவாக நடைபெற வேண்டுமென நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ, “மகாதீர் இன்னமும் பிரதமராக இருப்பது குறித்து மக்களின் உணர்வுகளை பிரதமர் புரிந்துக்கொள்ள வேண்டும். இது குறித்த முடிவை எடுக்கும்படி பிரதமர் தலைவர் மன்றத்திடம் விட்டுவிட்டார். எனவே பக்காதான் ஹராப்பான் தலைவர் மன்றம் பிரதமர் பதவி பரிமாற்றத்திற்கான சரியான திகதியை நிர்ணயிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அதே சமயத்தில்,கிளாந்தான் டி.ஏ.பி தலைவர் சைட் இப்ராஹிமும் ”பிரதமர் பதவி பரிமாற்றத்திற்கான முடிவு தற்போது தலைவர் மன்றத்திடம் உள்ளது. இது குறித்து பேச சந்திப்பு ஒன்றை கூடியவிரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!