Latestமலேசியா

தற்காப்பு படைகளின் தலைவர் ஜெனரல் எப்ஃபென்டியுடன் மித்ரா தலைமை இயக்குனர் மகாலிங்கம் சந்திப்பு

கோலாலம்பூர், ஜன 20 – மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் தலைமை இயக்குனர் மகாலிங்கம் மணியம் இன்று தற்காப்பு படைகளின் தலைவைர் எப்ஃபென்டி பூஜாங்கை சந்தித்தார். தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆயுதப் படைகளில் மலேசிய இந்தியர்கள் அதிகமாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் மகாலிங்கம் வலியுறுத்தினார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தேர்தல் கொள்கை அறிக்கையில் தற்காப்பு படைகளில் கூடுதலான இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதால் அந்த நோக்கத்திற்கு ஏற்ப இந்த கோரிக்கை அமைந்துள்ளதாக எப்ஃபென்டியிடம் மகாலிங்கம் சுட்டிக்காட்டினார். ஆயுதப் படைகளில் இந்திய இளைஞர்களை அதிகமாக இணைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் திட்டத்தை வரைவதற்காக விரைவில் செயல்திட்ட குழு உருவாக்கப்படும் என்றும் மகாலிங்கம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!