Latestமலேசியா

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நம்பிக்கை கூட்டணிக்கு தே.மு மிரட்டல்

கோலாலம்பூர். நவ 5 – 14வது பொதுத் தேர்தல் நடைபெற்ற பிறகு நாட்டில் இன்னமும் அரசியல் சூழ்நிலை பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகிறது.

இப்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜ.செ.க மற்றும் அமனா கட்சியின்றி பின்கதவு வழியாக புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னமும் ஒரு சில தரப்பு முயற்சியை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌9ஆவது இடைத்தேர்தலாக தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் அமைகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்த நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வென்றது அக்கட்சிக்கு சாதகமாக இருந்தாலும் தேசிய முன்னணியின் சார்பில் இம்முறை மீண்டும் ம.சீ.சவைச் சேர்ந்த வீ. ஜெக் செங் போட்டியிடுவதால்
நம்பிக்கை கூட்டணிக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கெராக்கான்‌, பெர்ஜாசா, மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களத்தில் குதித்தாலும் உண்மையான போட்டி நம்பிக்கை கூட்டணியின்
61 வயதுடைய கார்மைனி சார்டினி மற்றும் தேசிய முன்னணியின் 55 வயதுடைய வேட்பாளர் டாக்டர்
வீ ஜெக் செங் ஆகியோருக்கிடையில் தான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

நம்பிக்கை கூட்டணியை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் வெற்றி மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஜொகூர் மாநில அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி தலைமையில் இயங்கி வருவதால் இந்த இடைத் தேர்தலில் அக்கட்சி தோல்வி கண்டால் அது அரசியலில் பெரிய பின்னடைவை நம்பிக்கை கூட்டணிக்கு ஏற்படுத்தும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த தொகுதியை தற்காத்துக் கொள்வதில் நம்பிக்கை கூட்டணியின் உறுப்பு கட்சியான பெர்சத்து தோல்வி கண்டால் அது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்திற்கும் நெருக்கடியை உருவாக்க்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் முகமட் பாரிட்டிடம் 524 வாக்குகள் வேறுபாட்டில் வீ ஜெக் செங் தோல்வி கண்ட போதிலும் இம்முறை பாஸ் கட்சியும் அம்னோவும் கைகோர்த்து இருப்பதால் இத்தொகுதியை அவர் மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!