Latestஇந்தியா

டெல்லியில் 3ஆவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது

புதுடில்லி, பிப் 11 – டெல்லியில் மூன்றாவது முறையாக  ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி  சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில்   அர்விந்த்  கெஜ்ரிவால்  தலைமையிலான ஆம்  ஆத்மி கட்சி 63 தொகுதிகளை கைப்பற்றி 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. டெல்லி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்க வில்லை.

ஆட்சியமைப்பதற்கு  36 இடங்கள் மட்டுமே தேவையாக இருந்தாலும்  அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்ற வரலாற்றை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில்  மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிப்பதால் அதன்  தொண்டர்கள்  இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து  கொண்டாடினர்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!