Latestமலேசியா

வேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்

கோலாலம்பூர், டிச 17 – தாய்மொழியை வீட்டிலிருந்தவாறு  படித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேசிய பள்ளியில் சேர்ந்து படித்துக்கொள்ள வேண்டும்  என இன்று தனது முகநுலில் ஸம்ரி வினோத் கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தாம் தேசிய மொழிப் பள்ளியில் படித்தாலும் தமிழ் மொழியில்  பேசும் ஆற்றலைக் கொண்டிருக்கும்போது  தாய்மொழிப் பள்ளி எதற்காக இருக்க வேண்டும் என்ற பாணியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனைக் கண்ட சமூக வலைத்தளவாசிகள் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவதற்கு எதிராக குறிப்பிட்ட சில தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் இவ்வேளையில் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக ஸம்ரி வினோத் தமது கருத்தை சமுக வலைத்தலத்தில்  பதிவிட்டிருந்தார்.

வங்காளதேசிகள் இங்கு தேசிய  பள்ளிகளில் பயிலாவிட்டாலும் அவர்கள்  தாய்மொழிப் பள்ளிகளில் பயின்றவர்களைவிட நன்றாக  மலாய் மொழியில் பேசுகின்றனர். மலேசியர்கள் பகாசா மலேசியாவை  நன்றாக படிப்பதற்கு மட்டுமின்றி உள்நாட்டு கல்வி முறைக்கு ஏற்ப மலேசிய அடையாளத்தையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்வதற்கு தேசிய பள்ளிகளில் பயில வேண்டும் என அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.

மேலும், தாய்மொழி பள்ளியில் பயில்வோர் வேற்று மொழியையும் பண்பாட்டையும் தலையில் வைத்து கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகளாகி விடுங்கள் என்றும் கூறியிருந்த ஷம்ரி  தாய்மொழிப்  பள்ளிகளை அழிப்பற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!