Latestமலேசியா

டாக்டர் மகாதீர் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதற்கு எழுத்துப்பூர்வமான சத்தியபிரமான பிரகடனமா? தெரியாது என்கிறார் அன்வார்

கோலாலம்பூர்,  பிப் 12 –  துன் டாக்டர் மகாதீர் பிரதமராக தொடர்ந்து இருப்பதற்காக கட்சி வேறுபாடற்ற எழுத்துப் பூர்வமான சத்திய பிரமான வாக்குமூல பிரகடனம் எடுக்கப்பட்டுள்ள தகவலை தாம் அறிந்துள்ளதாக கூறப்படுவதை பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.

சரவாக் ரிப்போட் இணையத்தள பதிவேட்டில் வெளியான தகவலைப்போல் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தாம் அடுத்த பிரதமராக வருவதை தடுப்பதற்காக கூறப்படும் நடவடிக்கை குறித்து தம்மிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார் கூறினார்.

எனக்கு அதிகாரப்பூர்வமாக இது குறித்து தெரிவிக்கப்படவில்லையென அமைதி இனக்கத்தன்மையான வட்டார மாநாட்டை இன்று தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தல்வரை டாக்டர் மகாதீர் பிரதமராக நீடிப்பதற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும சத்திய பிரமான பிரகடனத்தில் கையெழுத்திடுவற்காக எங்கு இருந்தாலும் உடனடியாக கோலாலம்பூருக்கு வரும்படி அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் , டாக்டர் மகாத்தீரின் பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பி.கே,ஆர் கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி ஆகியோருக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதாக சரவா ரிப்போட் தகவல் வெளியிட்டது.அன்வாரிடம் அதிகார பரிமாற்றம் ஒப்படைப்பதை பக்காத்தான் ஹராப்பான கூட்டணி நேரடியாக தடுக்கும் முயற்சியாகவும் இந்த திட்டம் அமைந்ததாக தகவல்கள் வெளியாகின.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!