Latestமலேசியா

டாக்டர் மகாதீர் சுய விருப்பத்தோடு விலகினால்தான் பிரதமர் பதவியை ஏற்பேன் ; அன்வார்

கிமானிஸ், ஜன. 15 – டாக்டர் மகாதீரிடமிருந்து அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெறுவதையே தாம் விரும்புவதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மகாதீர் சுய விருப்பத்தின் பேரில் பதவி விலக வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அதிகாரப் பரிமாற்றம் விரைவாக நடைபெற் வேண்டுமென நெருக்குதல் கொடுத்தாலும் இணக்கப்பூர்வமாகவும் மற்றும் அமைதியான முறையிலும் பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்த வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார். அதிகாரப் பரிமாற்றம் சிறந்த முறையில் நடைபெறவேண்டும். டாக்டர் மகாதீர் அனுபவம் நிறைந்தவர்.நாட்டிற்காக பெரும் பங்காற்றியவர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும் என அன்வார் சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கை கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். நெருக்கடி மற்றும் முறையற்ற வகையில் அதிகாரப் பரிமாற்றம் நடைபெறுவதை நான் ஏற்கமாட்டேன். நட்புறவின் அடிப்படையில் முறையான அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என கிமானிஸ் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் இதனை தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!