Latestமலேசியா

ஜோ லோவுக்காக‌ மற்ற நாடுகளுடன் சண்டையிட முடியாது – மகாதீர்

கோலாலம்பூர், நவ 7 – ஜோ லோவை கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக நம்பப்படும் நாடுகளுடன் போர் செய்து கொண்டால் அது மலேசியாவிற்குதான் இழப்பாக இருக்குமென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அப்படி போரில் ஈடுபடுவதற்கு மலேசியா பலம் பொருந்திய ஒரு நாடாக இல்லை என்பதையும் அரசாங்கம் உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.

நாம் போரில் ஈடுபடலாம். ஆனால் அதில் நாம் தோல்வி அடைவோம் இதனால் ஜோ லோவையும் நாம் இழந்து விடுவோம். நாம் ஒரு பலம் பொருந்திய நாடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும் என டாக்டர் மகாதீர் கூறினார்

சில வேளைகளில் அவர்கள் நம்மிடம் நன்றாக இருப்பார்கள். இன்னும் சில வேளையில் அவர்கள் நம்முடன் நல்ல சூழ்நிலையில் இருக்க மாட்டார்கள். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என இன்று தேசிய பாரம்பரிய மற்றும் கலை கலாச்சார அகாடெமியின் 15- ஆவது பட்டமளிப்பு சடங்கிற்கு பின்னர் செய்தியாளர்களை பேசியபோது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மோசட் பாணியில் ஜோ லோவை கைது செய்வதற்கான வியூகத்தை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென டத்தோ காடிர் ஜாசின்‌ கூறியிருந்தது குறித்தும் பிரதமரிடம் வினவப்பட்டது.

ஜோ லோ எங்கு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா என வினவப்பட்டபோது 1எம்டிபி ஊழலில் முக்கிய சூத்திரதாரி என நம்பப்படும் அந்த வர்த்தகர் எங்கு இருக்கிறார் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது என டாக்டர் மகாதீர் மறுமொழி தெரிவித்தார்.

ஜோ லோ உலகத்தின் மேற்கே இருக்கிறாரா அல்லது கிழக்கே இருக்கிறாரா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. எனினும் அவர் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு வருகிறது .இந்த தகவல்களைப் பெறுவது கூட அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அவர் வெளிநாடு கடப்பிதழை வைத்திருப்பதாகவும் தனது உருவத்தை மாற்றி கொண்டிருப்பதாகவும் கூட என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் இவை அனைத்தும் ஆதாரம் இல்லாத ஒரு வதந்திதான் . எனினும் இப்படி நடப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது. இதுதான் மலேசியாவுக்கு சிரமமான ஒன்று என டாக்டர் மகாதீர் ‌கூறினார்

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button