Latestமலேசியா

ஜாவி மொழி விவகாரம் ஆதரவு – எதிர்ப்பு மாநாடு எதுவும் நடத்த வேண்டாம் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர் டிச 23 ஜாவி மொழியை ஆதரித்தோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பேரணி எதனையும் நடத்த வேண்டாம் என பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற கூட்டங்கள் அல்லது பேரணியினால் அரசியல் மற்றும் இன விவகார  பதட்டம் மேலும் மோசமான சூழ்நிலைக்கு கொண்டுச் செல்லும்   என தாம் கவலைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே டோங் ஷோங் உட்பட அனைத்து தரப்பினரும் பேச்சுக்கள் நடத்துவதில் கவனம் செலுத்தும்படி அவர் வலியுறுத்தினார், நாடு மற்றும் இன பண்பாட்டின் பொக்கிஷமாக ஜாவி எழுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மலேசியா பல இன மற்றும் பல்வேறு பண்பாட்டு அம்சங்களை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. இந்த சிறப்பு அம்சங்களை கொண்டதற்காக நாம் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்,

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!