Latestமலேசியா

ஜாவி எழுத்து படிப்பதை விவகாரமாக ஆக்கக் கூடாது அன்வார்

கோலாலம்பூர் .ஜன5 ஜாவி  எழுத்து தேசிய பராம்பரியம். எனவே அந்த எழுத்தை  படிப்பதை ஒரு விவகாரமாக ஆக்கக்கூடாது என பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஜாவி எழுத்துக்கு எதிராக சில தரப்பினரின்  எதிர்ப்பு வரம்பு மீறிய ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜாவி எழுத்து விவகாரத்தை பெரிது படுத்தக்கூடாது. இதற்கு சிலர் தெரிவித்துவரும் எதிர்ப்பு  அளவுக்கு மீறிய ஒன்றாக இருப்பதாக  அவர் சொன்னார்.

ஜாவி எழுத்து பாரம்பரியமானது. சமஸ்கிருத மொழி, லத்தின் மொழி கூட பழமையானதுதான். ஆனால் அதனை இன்னும் மக்கள் பயின்று வருகின்றனர்.தேசிய எழுத்தாக உருவாக்குவதற்காக நாம்  ஜாவி எழுத்தில் ஆளுமை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஜாவி  எழுத்து அறிமுகம் மூன்று பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது.எனவே இதனை ஒரு விவகாரமாக ஆக்கக் கூடாது என தாம் விரும்புவதாக  செர்டாங்கில் செய்தியாளர்களிடம்
பேசியபோது அன்வார் தெரிவித்தார். மலாய் மொழியின் அடிப்படை அம்சமாக ஜாவி எழுத்து இருப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு  நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய மொழி பாட புத்தகத்தில் மூன்று பக்கங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவி எழுத்திற்கு  சீன கல்வி அமைப்பான  டோங்  ஜோங் மற்றும் ஜியாவ் ஷோங் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!