Latestமலேசியா

சொஸ்மாவில்‌ தடுப்புக் காவல் – குடும்பத்தினர் பிரதமரிடம் மகஜர் சமர்ப்பித்தனர்

கோலாலம்பூர், நவ 21 – தமிழ்  ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி  சொஸ்மா  எனப்படும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் ‌குற்றம்சாட்டப்பட்டுள்ள  டி.ஏ.பியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான  ஜி. சாமிநாதன், பி. குணசேகரன் உட்பட 12 பேரின் குடும்பத்தினர் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரரிடம்‌ மகஜர் சமர்ப்பித்தனர்.

சொஸ்மா சட்டம் ‌ அகற்றப்பட வேண்டும்  என்பதோடு கடந்த பொதுத் தேர்தலின்போது மக்கள் கூட்டணி வழங்கிய தேர்தல் கொள்கை அறிக்கை வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட சீரமைப்புக்கு எதிராக  சொஸ்மாவும்‌ அந்த சட்டத்தை பயன்படுத்தி இருப்பதும் காட்டுவதாக மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி சாமிநாதனின் துணைவியார் உமாதேவி வீரபத்திரன் பிரதமருக்கு வழங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்ளார்

சாமிநாதனுடன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன்  மற்றும் இதர  10பேர் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

பாலமுருகன், எஸ்.தீரன்,  எ. கலைமுகிலன், எஸ் சந்துரு  எஸ் .அரவிந்தன், தனகராஜ், எம் பூமுகன், சந்திரன், சுந்தரம் ரெங்கன் என்ற ரெங்கசாமி, வி சுரேஷ்குமார் , பி.சுப்பிரமணியம் ஆகியோர் சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இதர நபர்களாவர்.

சட்டமன்ற உறுப்பினர்களான சாமிநாதன்  மற்றும் பி. குணசேகரன் ஆகியோர் சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில்  நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவதற்கு இவர்கள் இருவரும் பெரும் பங்காற்றியிருப்பதை  உமாதேவி  பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தது மற்றும் அந்த இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதிக்கும்  இவ்வாண்டு அக்டோபர் 11-ஆம் தேதிக்குமிடையே அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. 

சொஸ்மா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் ,உறவினர்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் நாடாமன்ற கட்டிடத்திற்கு வெளியே சொஸ்மாவுக்கு எதிராக அமைதி மறியலிலும் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் சட்டத்துறை அமைச்சர்  லியூ வேய் கியோங் ஆகியோரிடமும் மகஜர் வழங்கப்பட்டன .இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ராம்  கர்ப்பால் சிங்கும் கலந்து கொண்டார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!