Latestஉலகம்

சைபீரியாவில் 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்கு கண்டுபிடிப்பு – நாயா ? ஓநாயா?

நவ 29 – அண்மையில் சைபீரியாவில் 18,000 ஆண்டுகளுக்கு இறந்து போன விலங்கின் உடல் ஒன்று உறைபனி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மீது நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையில் இந்தக் குட்டி விலங்கினம் எந்த வயதில் இறந்தது, உறைநிலையில் எவ்வளவு காலம் பாதுகாக்கப்பட்டது மற்றும் அது ஆண் விலங்கினம் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டன.
ஆனால், ஆய்வாளர்களை குழப்பத்தில் தற்போது ஆழ்த்தியிருப்பது இது நாயா அல்லது ஓநாயா என்ற சந்தேகம்தான். இறந்தபோது இரண்டு மாதமே ஆகியிருந்த இந்த குட்டி விலங்கின் முடி மற்றும் பல் அனைத்தும் அப்படியே இருக்கும் அளவுக்கு இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த விலங்கினத்தை சேர்ந்தது என்று இதுவரை நடத்தப்பட்ட டிஎன்ஏ
பரிசோதனைகளால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை.
ஓநாய்களுக்கும், நவீன கால நாய்களுக்கும் இடையிலான பரிணாம வளர்ச்சியின் தொடர்பை இந்த விலங்கினம் வெளிப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நாய்களுக்கும், ஓநாய்களுக்கும் பொதுவான மூதாதையரிடம் இருந்து இந்த விலங்கினம் தோன்றியிருக்கலாம் என இதன் டிஎன்ஏ-யில் நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக ஸ்வீடனின் மரபணு ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டாவ் ஸ்டான்டன் என்பவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மையத்தை சேர்ந்த இன்னொரு ஆய்வாளர் லவ் டாலன், “இந்த விலங்கினம் ஓநாய்க்குட்டியா அல்லது இதுவரை கண்டறியப்பட்ட முற்கால நாய்குட்டியாக இருக்கலாம்” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த விலங்கினத்தின் மீது மேலதிக மரபணு வரிசை ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்வர். அவர்களின் கண்டுபிடிப்புகள் நாய்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!