Latestமலேசியா

சுரைடாவுக்கு விளக்கம் கோரும் கடிதம் – பி.கே.ஆர் வழங்கியது

கோலாலம்பூர், ஜன 18 – மலாக்காவில் டிசம்பர் மாதம்  நடைபெற்ற கட்சியின்  தேசிய மாநாட்டிற்குப் பின்  சர்ச்சைக்குரிய அறிக்கையை  வெளியிட்டதாக நம்பப்படும்   உதவித் தலைவர் சுரைடா கமாருடினுக்கு எதிராக  பி.கே.ஆர் விளக்கம் கோரும் கடிதம் வழங்கியது . அவருக்கு நேற்று இந்த கடிதம் வழங்கப்பட்டதாக  பி.கே.ஆர் தலைமைச் செயலாளர்  சைபுடின் நசுட்டியோன்  தெரிவித்தார்.

எனினும்  சுரைடா  என்ன குற்றம் புரிந்தார் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஒழுங்கு நடவடக்கை குழுவில் தாம் இல்லை என்பதால் இது குறித்த விவரங்களை அவர்  வெளியிட மறுத்துவிட்டார். ஒழுங்கு நடவடிக்கை குழு  முடிவு எடுப்பதற்கு முன்  14 நாட்களுக்கள்  விளக்கம் அளிக்கும்படி   சுரைடா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே பி.கே.ஆர் கட்சியின் மாநில தலைவர்களில் பெரும்பாலோர்  சுரைடாவை கட்சியிலிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டதாக  அக்கட்சிக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!