Latestமலேசியா

சீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 18 – சில முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் வெடிக்கும் என பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார், இவ்வாண்டு ஜூன் மாத்திற்குள் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுதினார்.

சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் நம்பிக்கை கூட்டணி முழு கடப்பாட்டுடன் செயல்பட தவறிவிட்டதாகவும் அவர் சொன்னார்
இந்த சீரமைப்புகள் அல்லது சீர்த்திருத்தங்கள் பல ஏற்கனவே வரையப்பட்டு விட்டன. ஜூன் மாதத்திற்குள் அவற்றை அமல்படுத்தாவிட்டால் சீரமைப்பை கொண்டு வருவதில் நம்பிக்கை கூட்டணி தோல்வி கண்டுவிட்டதாக பொருள்படும் என் அவர் கூறினார்.

மீண்டும் தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் தேவைப்பட்டால் மக்களுக்காக நாங்கள் தெருப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என அம்பிகா கூறினார். போலீசாரின் தவறான நடவடிக்கை குறித்து சுயேட்சை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளோம்.

அதே போன்று மரண தண்டனை விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் அம்பிகா சுட்டிக்காட்டினார். பல முக்கிய வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதனை அவர்கள் விரைவாக அமல்படுத்த வேண்டும் என கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அப்பிகா இத்தகவலை வெளியிட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!