Latestஉலகம்

சீனாவில் ஷின்ஜியாங்கில் நிலநடுக்கம்

பெய்ஜிங், ஜன 20 – சீனாவில்  ஷின்ஜியாங் வட்டாரத்தில்  ரெக்டர் கருவியில்  6.4 அளவில் பதிவான  நிலநடுக்கத்தினால்  மூவர் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.
நேற்றிரவு 9.27 மணியளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து   8 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. உயரமான கட்டிடங்களில் குடியிருக்கும் மக்கள்  வலுவான   சத்தத்தை உணர்ந்ததாகவும்,  சிலர் தங்களது பாதுகாப்பைக்  கருதி கட்டிடங்களிலிருநது வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்பட்டது.
காயம் அடைந்தவர்களில்  இரு சிறார்களும் அடங்குவர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்   பயணிகளுக்கான எட்டு ரயில் சேவைகளும் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!