Latestமலேசியா

சிறுமி சித்ரவதை: வளர்ப்புத் தாய் –தந்தை மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், பிப் 14 –  சிறுமியை சித்ரவதை செய்ததோடு அச்சிறுமியை புறக்கணித்ததாக அதன் வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியில் துன்புறுத்தியதோடு மனோரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாக 2001ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31 (1) (a) விதியின் கீழ் 38 வயது குடும்ப மாது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் இதே சட்டத்தின் கீழ் உடல் மற்றும் மனோ ரீதியில் அச்சிறுமியை துன்புறுத்தியது மற்றும் புறக்கணித்ததாக அந்த பெண்மணியின் கணவரான 36 வயதுடைய மெக்கனிக் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்விருவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10ஆண்டுகள் வரை சிறை அல்லது 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம். கடந்த ஆண்டு மத்தியிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம்வரை அவர்கள் இந்த குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

தம்மீது கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அந்த பெண் மறுத்தார். இதர பிள்ளைகளை பராமரித்து வருவத்தோடு தாய்ப்பால் அருந்தும் இருதயத்தில் துவாரம் விழுந்த ஒரு வயது குழந்தையையும் பராமரித்து வருவதால் தம் மீது கருணை காட்டும்படியும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இந்த தம்பதியரை 15,000 வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிபதி நோர்ஹயாத்தி முகமட் யூனுஸ் அனுமதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் மறு செவிமடுப்பதற்கான தேதியை மாச் 17ஆம் தேதிக்கு நீதிபதி நோர்ஹயாத்தி நிர்ணயித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!