Latestவிளையாட்டு

சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையாக பி.வி சிந்து தேர்வு

புதுடில்லி. மார்ச் 9 – இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக பேட்மின்டன் விளையாட்டாளர் பி.வி.சிந்துவை பி.பி.சி தேர்வு செய்தது.
கடந்த ஆண்டு சுவிட்ஷர்லாந்தில் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய விளையாட்டாளராக சிந்து விளங்குகிறார்.
இதுவரை 5 அனைத்துலக விருதுகளை பி.வி சிந்து வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற விளையாட்டாளராகவும் அவர் திகழ்கிறார்.
பி.பி.சி.யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதை புதுடில்லியில் பி.பி.சியின் தலைமை இயக்குனர் டோனி ஹால் மற்றும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் காரன் ரிஜிஜூ ஆகியோர் வழங்கினர். பேட்மிண்டன் விளையாட்டில் தொடரந்து முன்னேற்றம் காண்பதற்கு இந்த விருது மேலும் தூண்டுகோலாக அமையும் என பி.வி.சிந்து தெரிவித்தார்.
கடும் உழைப்பு மட்டுமே வெற்றிக்கான படிக்கட்டாக இருக்க முடியும். என்றும் அவர் சொன்னார். கடந்த 10 ஆண்டுகாலமாக அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் சிறந்த விளையாட்டாளர்களுக்கான முதல் இடங்களைக் கொண்ட பட்டியலில் தமது நிலையை பி.வி.சிந்து தற்காத்து வருகிறார். இவ்வாண்டு நடைபெற்விருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் சிநது சாதனை படைப்பார் என விளையாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!