Latestமலேசியா

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A 

கிள்ளான்  நவ 21- கிள்ளன் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 22 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வில்  8 A பெற்றனர். இப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள்  7A மற்றும் 23 மாணவர்கள் 6 A பெற்றனர்.

சிலாங்கூரில் மிகப்பெரிய பள்ளியாக கருதப்படும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 355 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதியதாகவும் இவர்களில் 292 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரன் ரத்னம் தெரிவித்தார். இப்பள்ளியின் சிறந்த மாணவியாக வர்ஷாவினி கணேசன் அப்பாசாமி அறிவிக்கப்பட்டார்.
கடந்தாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில்  சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 25 மாணவர்களள் 8A பெற்ற வேளையில் இதர 34 மாணவர்கள் 7A  பெற்றனர்.
இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் அடைவு நிலையில்  சற்று குறைந்ததால் 8 A  பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டதாக கூறப்படுகிறது.
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!